ரஷ்ய படைகள் வெளியேறிய கெர்சன் நகரம்.! நேரில் பார்வையிட்ட அதிபர் ஜெலன்ஸ்கி.! 
                                    
                                    
                                   President Zelensky visit kherson city in Ukraine 
 
                                 
                               
                                
                                      
                                            ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய படைகள் கைப்பற்றிய கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை மீண்டும் உக்ரைன் படைகள் கைப்பற்றியுள்ளன.
இதனால் கெர்சன் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதையடுத்து கெர்சன் நகருக்குள் வந்த உக்ரைன் ராணுவம் ரஷ்ய கொடிகளை கீழே இறக்கிவிட்டு உக்ரைன் தேசிய கொடியை ஏற்றினர். மேலும் கெர்சனில் வசித்த மக்களும் அந்நகருக்குள் மீண்டும் வந்தனர். 
இந்நிலையில் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய கட்டுப்பாடில் உள்ள உக்ரைனிய நகரங்கள் மற்றும் கிராமங்களை மீட்பேன் என்றும், கெர்சன் நகரில் சட்ட திட்டங்களை அமல்படுத்துதல், நகர சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 
மேலும் ரஷ்யாவிடமிருந்து மீட்கப்பட்ட கெர்சன் பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், சுமார் 400-க்கும் மேற்பட்ட போர் குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், அதிபர் ஜெலன்ஸ்கி கெர்சன் நகரை நேரில் பார்வையிட்டார். பின்பு அங்குள்ள படைவீரர்களிடம் நகரின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து அதிபரைப் பார்த்த மக்கள் உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி, கெர்சன் நகரில் ரஷ்ய ராணுவம் வெளியேறியது போரின் முடிவுக்கான ஆரம்பம் என்று தெரிவித்துள்ளார்.
                                     
                                 
                   
                       English Summary
                       President Zelensky visit kherson city in Ukraine