இயற்கை பேரிடரிலும் அரசியல் ஆட்டம்...! காட்டுத்தீயை கட்டுப்படுத்தாத கனடா மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும்..! - டிரம்ப் அதிரடி மிரட்டல்
Political games even natural disasters Additional taxes imposed Canada not controlling wildfire Trump threatens action
கனடாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ, அந்நாட்டை மட்டுமல்லாமல் அண்டை நாடான அமெரிக்காவையும் கடுமையாக பாதித்துள்ள நிலையில், இந்த விவகாரம் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய அரசியல் மற்றும் வர்த்தக மோதலாக உருவெடுத்துள்ளது.
கனடாவின் பல்வேறு மாகாணங்களில் நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதனால் உருவாகும் அடர்ந்த புகை, எல்லையைத் தாண்டி அமெரிக்காவின் பல மாநிலங்களை சூழ்ந்துள்ளதால், காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை உருவாகி, வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்த சூழலை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடா அரசு காடுகளை முறையாக பராமரிக்கத் தவறியதன் விளைவாகவே இந்த பேரிடர் தீவிரமடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
அதன் தாக்கம் அமெரிக்காவுக்கு பரவி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், அமெரிக்கா மிகப்பெரிய நிதி இழப்பை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், இந்த பாதிப்புக்கு ஈடுகட்டும் வகையில் கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் சுங்க வரி விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பு இரு நாடுகளின் வர்த்தக உறவுகளில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.இதற்கு பதிலளித்த கனடா அரசு, காட்டுத்தீ பரவலுக்கு முக்கிய காரணம் பருவநிலை மாற்றம் மற்றும் நீடித்த வறட்சி சூழலே தவிர, அரசின் அலட்சியம் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.
மேலும், காடுகள் பாதுகாப்பு, தீ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இயற்கை வள மேலாண்மைக்காக 2020-ஆம் ஆண்டு முதல் சுமார் ரூ.58 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
டிரம்பின் கூடுதல் வரி எச்சரிக்கையும், கனடாவின் விளக்கமும் அடுத்தடுத்த அரசியல் மற்றும் பொருளாதார விவாதங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவில் விரிசல் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
English Summary
Political games even natural disasters Additional taxes imposed Canada not controlling wildfire Trump threatens action