நீச்சல் உடையில் 3 இளம் பெண்கள்... கழுத்தறுக்கப்பட்டு கடற்கரையில்! காவல்துறை தீவிர விசாரணை.! - Seithipunal
Seithipunal


ஈகுவேடார் நாட்டில் மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டு கடற்கரையில் புதைக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பெண்கள் தாங்கள் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக தங்களது உறவினர்களுக்கு ஏதோ ஆபத்தை உணர்ந்ததாக அனுப்பியுள்ள குறுஞ்செய்தி தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான  ஈகுவேடாரின் டோமிகோ பகுதியைச் சார்ந்த யூலியான மசியாஸ்(21), நயேலி டாபியா(22) மற்றும் டெனிஸ் ரெய்னா(19)  ஆகிய மூன்று பெண்களும் தங்கள் நண்பர்களை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்று இருக்கின்றனர். அவர்கள் சென்றதிலிருந்து எந்த ஒரு தகவலுமில்லாததால்  இணைந்த பெற்றோரில் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக காவல்துறை விசாரித்து வந்த நிலையில் டொமிகோ நகரில் இருந்து 84 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள எஸ்மெரால்டஸ் நதிக்கரையில் மூன்று இளம் பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறை அங்கு சென்று பார்த்ததில் காணாமல் போன மூன்று பெண்கள் தான் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அந்தப் பெண்கள் குளியல் உடையில்  கைகள் கட்டப்பட்டு கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையின் விசாரணையில் அந்த இளம் பெண்கள் தங்களுக்கு ஆபத்து வருவதை முன்கூட்டியே அறிந்திருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அந்த இளம் பெண்களில் ஒருவர் தனது சகோதரிக்கு அனுப்பியுள்ள  whatsapp மெசேஜில் நான் ஆபத்துக்களால் சூழப்பட்டிருப்பதாக உணர்கிறேன் என தெரிவித்திருக்கிறார். அந்தக் குறுந்தகவலின் அடிப்படையிலும் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police investigate young women buried on beach in South America in swimsuits


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->