POK கொதிப்பு! பாகிஸ்தானில் 70 ஆண்டுகள் புறக்கணிப்புக்கு எதிராக மக்கள் எழுச்சி...!
POK boiling People rising against 70 years neglect Pakistan
பாகிஸ்தான் அரசின் அநீதிகளுக்கு எதிராக, POK-வில் மக்கள் பெருமளவில் வீதியில் திரண்டு போராட்டம் நடத்தினர்.மேலும், “Shutter-down, Wheel-jam” என்ற பெயரில் அவாமி ஆக்ஷன் கமிட்டி (AAC) அழைத்த இந்த போராட்டம், காலவரையற்ற மக்கள் எழுச்சியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போராட்டத்தை அடக்க, நேற்றிரவு முதல் இன்டர்நெட்டை பாகிஸ்தான் அரசு துண்டித்ததோடு, பாதுகாப்புப்படையையும் குவித்துள்ளது.adhumattumindri, 70 ஆண்டுகளாக அரசியல் புறக்கணிப்பு, பொருளாதார பின்தள்ளல், அடிப்படை உரிமை மறுப்பு போன்ற காரணங்களால் கொதித்துள்ள மக்கள், 38 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதில்,POK சட்டமன்றத்தில் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 இடங்களை ரத்து செய்தல்
மானிய விலையில் மாவு வழங்கல்
மங்களா நீர்மின் திட்டத்துடன் இணைந்த நியாயமான மின் கட்டணம்
பாகிஸ்தான் பல ஆண்டுகளாக தாமதப்படுத்திய சீர்திருத்தங்களை உடனடியாக செயல்படுத்தல்
என்றவை முக்கியமானவை.
AAC தலைவர் சவுகாத் நவாஸ் மிர், “எங்கள் போராட்டம் எந்த அமைப்பிற்கும் எதிரானது அல்ல. ஆனால் 70 ஆண்டுகளாக எங்கள் மக்களுக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும். போதும். உரிமைகளை வழங்குங்கள்; இல்லையெனில் மக்களின் கோபத்தை சமாளிக்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
English Summary
POK boiling People rising against 70 years neglect Pakistan