நாட்டைக் காக்க மக்கள் இராணுவத்தில் இணைய வேண்டும் - உக்ரைன் அதிபர் அழைப்பு..! - Seithipunal
Seithipunal


நாட்டைக் காக்க மக்கள் இராணுவத்தில் இணைய வேண்டும் என உக்ரைன் அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா நாட்டு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷ்யாவின் முப்படைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 137 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் தெரிவிக்கையில், ராணுவ நிலைகளை தாக்குவதாக கூறும் ரஷியா மக்களை தாக்கி வருகிறது. அமைதியான நகரங்களை இலக்காக மாற்றி வருகிறது. இது மன்னிக்க முடியாத செயல் ஆகும்.

மேலும், ராணுவத்தில் சேர மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 90 நாட்களில் ராணுவத்தை திரட்டும் பணியை முடிக்க வேண்டும் என அவர் உததரவிட்டுள்ளார்.

ரஷிய படைகளிடம்  இருந்து நாட்டை காக்க மக்கள் முன்வர வேண்டும் எனவும் ரஷிய ராணுவத்திற்கு எதிராக களமிறங்கும் அனைவருக்கும் ஆயுதம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

People must join the army to defend the country


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->