புடினை சந்திக்க 40 நிமிடங்களாக காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர்; 10 நிமிடங்களில் வெளியேறிய வீடியோ வைரல்; நடந்தது என்ன..? - Seithipunal
Seithipunal


ரஷ்ய அதிபர் புடினை, சந்திக்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் 40 நிமிடங்கள் காக்க வைக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியா - ரஷ்யா இடையே நீண்ட காலமாக வலுவான உறவு நீடித்து வருகின்றது. அதன்படி, சீனா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் பிரதமர் மோடி நேரில் சந்தித்தனர். அத்துடன், கடந்த வாரத்தில் விளாடிமிர் புடின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து இரு நாடுகளுக்கு இடையிலான உச்சி மாநாட்டில் பங்கேற்று விட்டு நாடு திரும்பியுள்ளார்.

இந்த சூழலில், பாகிஸ்தான் ரஷ்யா உடன் நெருக்கமாக ஆர்வம் காட்டி வருகிறது. அதாவது, ரஷ்யா இந்தியா உடன் நெருக்கமாக இருந்தாலும், ரஷ்யா உடன் உறவை மேம்படுத்த விரும்புகிறோம் என சீனாவில் புடினை சந்தித்த போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் துர்க்மெனிஸ்தானில் சர்வதேச மாநாடு ஒன்று நடைபெற்றது. குறித்த மாநாட்டில் அதிபர் புடின், துருக்கி அதிபர் எர்டோகன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மாநாட்டின் இடையே புடின்-எர்டோகன் ஆகியோர் தனி அறையில் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அந்த நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர், புடினை சந்திக்க வந்துள்ளார். ஆனால், அவருக்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை என்றும், அவருடன் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர்ரும் அறை ஒன்றில் காக்க வைக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இவ்வாறு அனுமதி கிடைக்காததால் 40 நிமிடங்களுக்கு காத்திருந்து பிறகு ஷெபாஸ்ஷெரீப் அங்கிருந்து எழுந்து புடின் இருந்த அறைக்குச் சென்றுள்ளார், அப்போதும் அவருடன் முக்கிய நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். 10 நிமிடங்கள் மாத்திரமே புடினை சந்தித்த ஷெரீப் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistani Prime Minister waited for 40 minutes to meet Putin


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->