'மக்கள் பிரதிநிதியாக சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன்'; நாதக-வில் இருந்து விலகிய காளியம்மாள் உறுதி..! - Seithipunal
Seithipunal


சீமானின், நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 2024-இல் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் விலகினார். அப்போதிலிருந்து அவர், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவத்தொடங்கியுள்ளன. இந்நிலையில், அவர் புதிய கட்சியை ஆரம்பிப்பதா..? அல்லது வேறு கட்சியில் இணைவதா..? என்பது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144-வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காளியம்மாள் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது கூறியதாவது:

தனது அரசியல் பயணம் மக்களை சேர்ந்து இருக்கும் என்றும், சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பேன் என்றும்,  அவர்களுடைய பிரதிநிதியாக நிற்பேன் என்றும் அறிவித்துள்ளார். மேலும்,  அதற்கான சூழல் விரைவில் வரும் என்றும், வேறு கட்சிகளில் இணைவதா, என்பது குறித்தான முடிவை விரைவில் கூறுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய இவர், எந்த கட்சியில் இணைவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kaliammal confirms that she will definitely contest the assembly elections


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->