நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான்; அதிக கடன் வாங்கியதன் விளைவு; 64 கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ள IMF..! - Seithipunal
Seithipunal


கடுமையான நிதி நெருக்கடிகளால் பாகிஸ்தான் திண்டாடி வருகிறது.  கடன் சுமையை சமாளிக்க முடியாமல் உலக நாடுகளிடமும், சர்வதேச நிதியகத்திடமும் அதிக கடன் பெற்றுள்ளது. இந்நிலையில், கடந்த 2020 முதல் பொருளாதாரப் பிரச்சினைகளை அதிகளவில் சந்தித்து வரும் பாகிஸ்தான், சர்வதேச நாணய நிதியத்தின் ஐந்தாவது பெரிய கடனாளியாகவுள்ளது. 

பாகிஸ்தான், கடந்த 1958 முதல் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 20க்கும் மேற்பட்ட கடன்களை பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு முதல் சுமார் 3.3 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் 39 மாத காலத்திற்கு தவணை முறையில் $7 பில்லியன் பெறவுள்ளது. குறித்த கடன் திட்டங்களின் ஒரு பகுதியாக, நேற்று 1.2 பில்லியன் டாலர்களை IMF விடுவித்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கான 07 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம், மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை அந்நாட்டுக்கு விதித்துள்ளது. இதன்மூலம், அடுத்த 18 மாதங்களில் பாகிஸ்தான் பூர்த்தி செய்யவேண்டிய மொத்த நிபந்தனைகளின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஐஎம்எஃப்பின் அறிக்கையின்படி, புதிய உத்தரவுகள் குறிப்பாக ஊழலை எதிர்த்துப் போராடுவது, நிர்வாகத்தை வலுப்படுத்துவது மற்றும் வரி அமைப்பைச் சீர்திருத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.

இது குறித்து ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையின்படி முக்கிய நிபந்தனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது;  
உயர்மட்ட மத்திய அரசு ஊழியர்கள் அனைவரின் சொத்து விபரங்கள் குறித்த அறிக்கைகள், டிசம்பர் 2026க்குள் கட்டாயமாக ஓர் அதிகாரப்பூர்வ அரசு இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதன் நோக்கம், (அறிவிக்கப்பட்ட வருமானத்திற்கும் உண்மையான சொத்துக்களுக்கும் உள்ள இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் விளக்கப்படாத செல்வத்தைக் கண்டறிவது ஆகும்). அடுத்ததாக , ஊழல் அதிகமுள்ள 10 துறைகளில் உள்ள அபாயங்களைச் சமாளிப்பதற்கான காலக்கெடுவுடன் கூடிய செயல் திட்டத்தை அக்டோபர் 2026க்குள் பாகிஸ்தான் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சொத்து வெளிப்படுத்தல் கட்டாயம் மூத்த மாகாண அதிகாரிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானிடம் பணம் அனுப்பும் செலவுகளையும் விரிவாக ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவது வெளிநாட்டு நிதியுதவியின் மிகப்பெரிய ஆதாரமாக இருப்பதால், சர்வதேச நாணய நிதியம் பணம் அனுப்புவதில் மேலும் கவனம் செலுத்துகிறது.

எதிர்வரும், ஆண்டுகளில் பணம் அனுப்பும் செலவுகள் 1.5 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதால், அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் ஒரு செயல் திட்டத்தை வழங்குமாறு கடன் வழங்கும் நிறுவனம் பாகிஸ்தானிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் சர்க்கரை சந்தை தாராளமயமாக்கலுக்கான தேசிய கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு இஸ்லாமாபாத்தை சர்வதேச நாணய நிதியம் கேட்டுக் கொண்டுள்ளது. வணிக வங்கிகள் இந்தச் சொத்துத் தரவுகளை முழுமையாக அணுக அனுமதிக்கப்படும் என்றும், இந்தக் கடுமையான நிபந்தனைகளுடன், பாகிஸ்தான் ஏற்கெனவே அமலில் உள்ள பிற சீர்திருத்தங்களையும் தொடர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பணப் பரிமாற்றச் செலவுகளை மறுஆய்வு செய்தல், வரிச் சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லுதல், மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்குவதற்கான இறுதிச் செயல் திட்டத்தைத் தயாரித்தல், மின்சார கட்டண உயர்வுகளைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாகிஸ்தானின் அடுத்த தவணை நிதி, 64 நிபந்தனைகள் மற்றும் நிலுவையில் உள்ள மற்ற உறுதிமொழிகளைப் பூர்த்தி செய்வதைப் பொறுத்தே உள்ளது என்றுபொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IMF has imposed 64 strict conditions on Pakistan which has borrowed heavily to overcome the financial crisis


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->