பாகிஸ்தான் - ஆப்கான் மோதல்; எல்லையில் தலிபான் வீரர்கள் 67 பேர் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் அமைச்சர் தகவல்..!
Pakistani minister says 67 Taliban fighters killed on border
நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் ஆப்கான் தலிபான் படைகளுக்கு எதிரான பாகிஸ்தானின் ஆபரேசனில் 67 தலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சர் அதயுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
எல்லை அருகே உள்ள கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் நடைபெற்ற இந்த சண்டையில் மட்டும் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், இருநாட்டு வீரர்களும் ஒரு இடத்தில் நேருக்கு நேராக மோதிக் கொண்டதோடு, 12 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆபரேசனில் உயிரிழப்பு இல்லாமல் தலிபான் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 16 வடக்கு பலுசிஸ்தானில் ஆப்கானிஸ்தானின் தலிபான் படைகள் 16 இடங்களில் தாக்குதல் நடத்திய நிலையில், பாகிஸ்தான் ராணுவம் 25 இடங்களில் துப்பாக்கிச்சூடு மூலம் பதிலடி கொடுத்துள்ளனர்.
இதன் போது 27 பேர் கொல்லப்பட்டதில், துணை ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். மேலும், ஐந்து பேர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து நேற்று (திங்கட்கிழமை) பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் பாதுகாப்புப்படை 435 ஆப்கானிஸ்தான் தலிபான் படை வீரர்களை வேட்டையாடியது. 630 பேர் காயம் அடைந்தனர். 188 டேங்குகள் அழிக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistani minister says 67 Taliban fighters killed on border