டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டி மழையால் தடைப்பட்டால் இந்தியாவின் நிலை..? ஐசிசி விதியால் ஆப்பு..!
India will be eliminated from the T20 World Cup if the semi final match is interrupted by rain
10 வது டி20 உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை நறுக்கியுள்ளது. 20 போட்டிகள் பங்குபற்றிய இந்த தொடரில் லீக் போட்டிகள் முடிந்து, சூப்பர் 8 சுற்றுக்கு தேர்வான 08 அணிகளில் 04 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன..
இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில், தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகளும், நாளை மறுநாள் நடைபெறும் 02-வது அரையிறுதியில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும் பல பரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி மழையால் தடைப்பட்டால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்ற கருத்து தற்போது பேசும் பொருளாகியுள்ளது. அதாவது, ஐசிசி விதிமுறைகளின் படி, அரையிறுதிப் போட்டிகள் மழையால் முழுமையாகக் கைவிடப்பட்டால், Super 8 சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற அணிக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன்படி, பார்த்தால் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து அணி தனது பிரிவில் 03 வெற்றிகள் வெற்றிகளை பெற்று முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால், இந்தியா ஒரு போட்டியில் தோல்வியடைந்து தனது பிரிவில் 02-வது இடத்தையே பிடித்திருந்தது.

அந்தவகையில், போட்டி நடைபெறும் நாளில் போதிய நேரம் இருந்தும், குறைந்தபட்சம் 10 ஓவர்கள் கூட வீச முடியாத சூழல் ஏற்பட்டாலோ அல்லது போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்படும் பட்சத்தில், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த இங்கிலாந்து அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
ஆனால், அரையிறுதிப் போட்டிகளுக்கு மாற்று நாள் (Reserve Day) ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நாளிலும் மழை பெய்து ஆட்டம் தடைபட்டால் மட்டுமே இந்தப் புள்ளிபட்டியல் விதி படி கணக்கிடப்பட்டு அணி தேர்வு செய்யப்படும்.
English Summary
India will be eliminated from the T20 World Cup if the semi final match is interrupted by rain