தொடரும் போர் பதற்றம்; அனைத்து வகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடை..!
Iran bans exports of all types of food and agricultural products
அனைத்து வகையான உணவு மற்றும் விவசாயப் பொருட்களின் ஏற்றுமதிக்கு ஈரான் தடைவிதித்துள்ளது. இது குறித்து ஈரானிய ஏற்றுமதி கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது;
நாட்டில் நிலவும் போர் சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் இருப்பை உறுதி செய்ய ஈரான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.
இந்தத் தடையானது நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்க அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடைக்கான காலக்கெடு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனால் மறுஅறிவிப்பு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, உருளைக்கிழங்கு, அதைத் தொடர்ந்து தக்காளி, பேரீச்சம்பழம் மற்றும் முட்டை போன்ற குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே தற்காலிகத் தடைகள் விதிக்கப்பட்டிருந்தது.
அனால், கடந்த பிப்ரவரி 17 அன்று அமெரிக்கா, ஈரான் இடையில் நடைபெற்ற இரண்டாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதன் காரணமாக அமெரிக்கா ஈரானுக்கு அருகிலுள்ள பகுதிகளில் தனது ராணுவ இருப்பை அதிகரித்தது. அத்துடன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களில் 150 க்கும் மேற்பட்ட விமானங்களை அதிரடியாக நிறுத்தியது.

இதனையடுத்து, பிப்ரவரி 26 அன்று மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போதும் உடன்பாடு எட்டவில்லை. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் ஈரான்மீது தாக்குதலை தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் கலாய் முதல் இஸ்ரேல், அமெரிக்கா இரண்டும் இணைந்து கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்த தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
அத்துடன், துபாய், அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரக நாடுகள் மீதும் தாக்குதலை தொடர்ந்து வருகின்ற நிலையில் இந்த ஏற்றுமதி தடையை ஈரான் விதித்துள்ளது.
English Summary
Iran bans exports of all types of food and agricultural products