இந்தியா மீது போர் தொடுப்போம்... பிலாவல் பூட்டோ மிரட்டல்!
Pakistan minister war warn to India
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலாக இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. அதில் முக்கியமாக, இருநாடுகளுக்கிடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது. பின்னர், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்தது.
பாகிஸ்தான், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், இந்தியா அதனை நிராகரித்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீர், சிந்து நதி குறுக்கே இந்தியா அணை கட்ட முயன்றால் ஏவுகணைகளால் அழித்துவிடுவோம் என்று மிரட்டினார். இதற்கு இந்தியா கடுமையான பதிலடி கொடுத்தது.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவும், சிந்து மாகாண கலாச்சார விழாவில் பேசியபோது, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்படுமானால், அது இந்தியாவுக்கு எதிராக புதிய போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.
சிந்து நதி நீரை பாகிஸ்தானிலிருந்து மாற்றுவது, அந்த நாட்டின் வரலாறு, கலாச்சாரம், நாகரிகம் மீதான நேரடி தாக்குதலாகும் என்றும், இந்திய பிரதமர் மோடி சிந்து நதிக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால், பாகிஸ்தானின் ஒவ்வொரு மாகாண மக்களும் போருக்கு தயாராக இருப்பார்கள் என்றும் கூறினார்.
மேலும், இது இந்தியா தோல்வியடையும் போராக இருக்கும்; போர் ஏற்பட்டால் பாகிஸ்தான் தனது ஆறு நதிகளையும் மீட்டெடுக்கும் என்றும், பாகிஸ்தான் ஒருபோதும் தலைகுனியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
English Summary
Pakistan minister war warn to India