பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம்: இம்ரான் கான் கட்சி ஆட்சி கலைப்பு! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி ஆட்சி செய்துவந்த கைபர் பக்துன்கவா மாகாணத்தில், நிலவிவரும் தீவிர அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யக் கோரி பிடிஐ கட்சி நடத்தி வரும் தீவிரப் போராட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, குடியரசுத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி மாகாண ஆட்சியைப் பணிநீக்கம் செய்து, ஆளுநருக்கு முழு அதிகாரங்களையும் வழங்கி அவசரநிலையைப் பிறப்பித்துள்ளார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி மாபெரும் கண்டனப் பேரணியை நடத்த பிடிஐ கட்சி திட்டமிட்டுள்ள நிலையில், மறுபுறம் தெஹ்ரிக்-இ-தாலிபான் போன்ற ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களும் மாகாணத்தில் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதத்தை ஒடுக்க மாகாண அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பிரதமர் அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. அவசரநிலை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, மாகாண நிர்வாகத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆளுநரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

மத்திய அரசின் இந்தத் திடீர் முடிவிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பிடிஐ செய்தித் தொடர்பாளர் சுல்பிகார் புகாரி, மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மாகாண ஆட்சியை மத்திய அரசு சட்டவிரோதமாகக் கலைத்துள்ளதாகச் சாடியுள்ளார். பேச்சுவார்த்தை மூலம் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்காமல், மத்திய அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை மாநிலத்தில் மேலும் ரத்தக்களரிக்கும் அரசியல் ஸ்திரமின்மைக்கும் மட்டுமே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan Declares Emergency in Khyber Pakhtunkhwa Amid Political Tensions


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->