பிரதமர் மோடியும் மத்திய அரசும் வெட்கித் தலைகுனிய வேண்டும்: சிஜேபி காரசார குற்றச்சாட்டு!
CJP Launches Blistering Attack on PM Modi and Centre Over Protests Suppression
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP), பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துப் போர்க்கொடி தூக்கியுள்ளது. நாட்டில் இதுவரை கண்டிராத வகையில் மிகவும் பயந்த சுபாவமுள்ள ஒரு பிரதமராக மோடி இருக்கிறார் என்றும், தனது சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகவும் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிராகவும் மத்திய அரசு போரை அறிவித்துள்ளதாகவும் சிஜேபி செய்தியாளர் சந்திப்பில் சாடியுள்ளது.
காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த சிஜேபி இணை ஒருங்கிணைப்பாளர் சௌரவ் தாஸ், தற்போதைய சூழல் அறிவிக்கப்படாத அவசரநிலையைப் போன்று இருப்பதாகத் தெரிவித்தார். டெல்லியில் நடப்பது அப்பட்டமான காவல்துறை ஆட்சி என்று சாடிய அவர், குடிமக்களின் நடமாடும் சுதந்திரமும் ஜனநாயக ரீதியாகப் போராடும் உரிமையும் நசுக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகத் தலைநகரை ஒரு ராணுவத் தளமாக மாற்றிய பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் சீறினார். மேலும், அரசியலமைப்பு ரீதியான அமைப்பான தேர்தல் ஆணையம் பிரதமரிடம் முழுமையாகச் சரணடைந்துவிட்டது என்றும்; தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ஊழலுக்கு எதிரான தங்களின் போராட்டம் இத்துடன் முடியாமல் இனிமேல்தான் தொடங்கும் என்றும் வலியுறுத்தினார்.
அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, மாணிக் சர்க்கார் மற்றும் பினராயி விஜயன் ஆகிய நான்கு முன்னாள் முதலமைச்சர்கள் வீதியில் இறங்கி இளைஞர்களுடன் இணைந்து நின்றதே, ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக அவர்கள் முன்னெடுக்கும் தீவிரப் போராட்டத்திற்குச் சான்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.a
English Summary
CJP Launches Blistering Attack on PM Modi and Centre Over Protests Suppression