பிரதமர் நிகழ்வு மேடையில் நயினார் நாகேந்திரன்: எந்த நெறிமுறையின்படி அமர வைக்கப்பட்டார்? - மாணிக்கம் தாகூர் கேள்வி! - Seithipunal
Seithipunal


சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்டத் தொடக்க விழாவில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேடையில் அமர வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடும் கண்டனமும் கேள்வியும் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணித் திறப்பு விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். அதே சமயம், இவ்வளவு பெரிய திட்டத் திறப்பு விழாவில் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொள்ளாதது ஆச்சரியமளிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளுக்கு எனச் சில வரைமுறைகளும் நெறிமுறைகளும் (Protocols) உள்ளன என்றும்; உள்ளூர் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் மட்டுமே மேடையில் இடம்பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் தற்போதைய சூழலில் எம்.பி.யோ அல்லது எம்.எல்.ஏ.வோ இல்லாத, கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் எந்த நெறிமுறையின் கீழ் பிரதமர் மோடியுடன் மேடையில் அமர வைக்கப்பட்டார் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு விழாக்களை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது போன்ற இத்தகைய நடைமுறைகள் வியப்பளிப்பதாக மாணிக்கம் தாகூர் சாடியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Manickam Tagore Questions Protocol Over Nainar Nagendran Presence on Stage with PM Modi


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->