எத்தியோப்பிய அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 109 பேர் பலி, 116-க்கும் மேற்பட்டோர் மாயம்!
Migrant Boat Capsizes Off Djibouti Coast 109 Dead and Over 116 Missing
சுமார் 350 பேருடன் ஜிபூட்டியிலிருந்து ஏமனுக்குப் புறப்பட்ட அகதிகள் படகு, குஹேரே பகுதிக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 109 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐநாவின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 52 ஆண்களும், 42 பெண்களும், 15 குழந்தைகளும் (9 சிறுமிகள் மற்றும் 6 சிறுவர்கள்) அடங்குவர்.
இந்த விபத்தில் 80-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் அனைவரும் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 64 பேர் புலம்பெயர்ந்தோர் உதவி மையத்தில் தங்கவைக்கப்பட்டுத் தேவையான உதவிகளைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இன்னும் 116-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்பதால், ஜிபூட்டி அதிகாரிகள் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடா நாடுகளைச் சென்றடையும் நம்பிக்கையில் ஆபத்தான முறையில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பயணங்களின் ஆபத்துகளை இந்தச் சம்பவம் பிரதிபலிப்பதாக ஜிபூட்டியில் உள்ள IOM அமைப்பின் தலைவர் அலெக்சாண்டர் கோய்சாக் வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய வழித்தடங்களில் 2025-ஆம் ஆண்டில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Migrant Boat Capsizes Off Djibouti Coast 109 Dead and Over 116 Missing