பாகிஸ்தானில் நடந்த தற்கொலை தாக்குதலுக்கு நாங்க காரணமா? கொந்தளித்த இந்தியா!
Pakistan bomb blast india condemn
பாகிஸ்தானில் தற்கொலைத் தாக்குதல் நடைபெற்ற பின்னணியில் இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜூன் 28-ம் தேதி, பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணம், வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் ராணுவ பேரணிக்கு எதிராக தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தில் வந்த பயங்கரவாதி, ராணுவ வாகனத்தில் மோதிவெடித்ததில், 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 10 ராணுவத்தினரும், 6 குழந்தைகள் உள்பட 29 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தலிபானின் கிளை அமைப்பான ஹஃபிஸ் குல் பஹதூர் என்ற அமைப்பின் தற்கொலைப் படை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தும், பாகிஸ்தான் அரசு, தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தப் புகாரை முற்றிலுமாக நிராகரித்த இந்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் ஆதாரமில்லாத இந்தச் செயல்முறையை கண்டித்து, அரசியல் நோக்கங்களுக்காக இந்தியாவை குற்றம் சாட்டும் பழைய பழக்கத்தையே பாகிஸ்தான் தொடர்கிறது எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.
அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாகிஸ்தான் உரிய பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Pakistan bomb blast india condemn