பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்.! பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த காவல் நிலையம் மீட்பு.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவில் இராணுவ கன்டோன்மென்ட் வளாகத்தில் பயங்கரவாத தடுப்பு அமைப்பிற்கான காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு தாலிபான்கள் உட்பட பல்வேறு பயங்கரவாத பிரிவினை சேர்ந்த 33 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதி ஒருவர் போலீசாரை தாக்கி அவரிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றினார். இதன் மூலம் அங்கிருந்த விசாரணை கைதிகள் அனைவரையும் விடுவித்து காவல் நிலையத்தை கைதிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

பிணைக்கைதிகளை விடுவிக்க கடந்த இரண்டு நாட்களாக ராணுவ அதிகாரிகளுக்கும், கைதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருப்பினும் எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் இருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் கைதிகள் தங்களுக்குள் அடிதடி மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதை பயன்படுத்தி சிறப்பு அதிரடிப்படை வீரர்களை காவல் நிலையத்திற்குள் அனுப்பி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பயங்கரவாத பிரிவை சேர்ந்த 33 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு, பிணைக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் அதிரடிப்படை வீரர்கள் 2 பேர் பலியாகியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan army rescued the police station held by terrorists


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->