இந்தியா மீது அணு ஆயுதத்தை பயன்படுத்துவோம்! பகிரங்க எச்சரிக்கை!
Pahalgam attack india vs Pakistan Nuclear Weapons
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், இந்தியா சார்பில் எந்தவொரு தாக்குதல் நடத்தினாலும் அதற்குப் பதிலடி கொடுக்க அணு ஆயுதங்கள் உட்பட அனைத்து வகை ராணுவ சக்திகளையும் பயன்படுத்த தயார் என பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் ரஷியா நியமன தூதர் முகமது காலித் ஜமாலி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இந்திய ஊடகங்கள் எங்களை குறிவைத்து பொய்யான செய்திகளை பரப்பி வருகின்றன.
இவ்விவாதங்களில் ஈடுபட எங்களுக்கு விருப்பமில்லை. ஆனால், இந்தியா எங்கள் நாடு மீது தாக்குதல் மேற்கொண்டால், எங்களது முழு பாதுகாப்பு திறனையும் பயன்படுத்துவோம்.
வழக்கமான ஆயுதங்களோடு அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்படலாம்" என மிரட்டல் விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
இதேபோல பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஹனிஃப் அப்பாசி, “பாகிஸ்தானின் எல்லைகளில் 130 ஏவுகணைகள் தயாராக உள்ளன. இந்தியாவின் செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான பதிலடி வழங்குவோம்” என எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pahalgam attack india vs Pakistan Nuclear Weapons