20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ பிறந்த தினம் இன்று.!! - Seithipunal
Seithipunal


பிக்காசோ :

20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியரான பாப்லோ பிக்காசோ 1881ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி ஸ்பெயினின் மலகாவில் பிறந்தார்.

ஜார்ஜெஸ் பிராக் என்பவருடன் கூட்டாக கியூபிசம் என்னும் கலைப்பாணி ஒன்றை ஆரம்பித்து வைத்தவர் என்ற வகையிலேயே இவர் பெரிதும் அறியப்பட்டார்.

தனது ஏழு வயதிலேயே ஒரு தேர்ந்த ஓவியனைப் போல ஓவியங்களை வரைந்த இவர், தன் பதினான்கு வயது நிறைவடைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக்கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் நன்கு கற்றுக்கொண்டார்.

தன் வாழ்நாளில் பிக்காசோ 1885 சிற்பங்கள், 1228 ஓவியங்கள், 2880 பீங்கான் மண்பாண்ட சிற்பங்கள், 12000 சாதாரண சித்திரங்கள் மற்றும் 12000 திரைச்சீலை வேலைப்பாடுகள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை உருவாக்கியுள்ளார்.

அமைதிச்சின்னமான புறாவையும், ஆலிவ் இலைகளையும் பிரபலப்படுத்தியவர் பிக்காசோ தான். வரலாற்றில் தனக்கென்று ஒரு நீங்காத தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட பிக்காசோ 1973ஆம் ஆண்டு மறைந்தார்.

சர்வதேச பள்ளி நூலக தினம் :

அமெரிக்காவைச் சேர்ந்த பிளான்ச் உல்ஸ் என்கிற பெண்மணி சர்வதேச அளவில், பள்ளி நூலகங்களுக்கான ஒரு அமைப்பை 1999ஆம் ஆண்டில் உருவாக்கினார். இவரின் முயற்சியால் முதன்முதலாக 1999ஆம் ஆண்டு அக்டோபர் நான்காவது திங்கட்கிழமை (25.10.2021) சர்வதேச பள்ளி நூலக தினமாக கொண்டாடப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pablo picasso birthday 2021


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->