வடகொரியா வெள்ளப்பெருக்கு: 1,000 பேர் பலி! அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை! - Seithipunal
Seithipunal


வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வடகொரியா அதிபர் கிம் ஜொங் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் வடகொரியாவில் வெள்ளப்பெருக்கு  மற்றும் நிலச்சரிவுகளில் ஏற்பட்டதால் அங்கு 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரெயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி பாதிக்கப்பட்டன. இந்த வெள்ளத்தில் 1000 பேர் சிக்கி உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

வடகொரியாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் வெள்ளத்தினால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார் அதிபர் கிம் ஜாங் உன். இந்த இடங்களை பழைய நிலைக்கு மீண்டும் கட்டிமுடிக்க பல மாதங்கள் ஆகும் என்று கூறினார். மேலும் வெள்ளப்பெருக்கு பாதித்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசாங்கம் தற்காலிக தங்குமிடம் வழங்கி உதவியுள்ளது.

இந்நிலையில், இந்த வெள்ளப்பெருக்கு பாதிப்புகளைத் தடுக்க மற்றும் மக்களை பாதுகாக்க தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, அதிபர் கிம் ஜாங் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகள் 30 நபர்களை கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இதுதொடர்பாக தென்கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது, ஆனால் வடகொரியா தரப்பில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை. இதற்கு முன்பாக  வட கொரியா வெள்ள பாதிப்பால் அதிக மக்கள் உயிரிழந்துள்ளதை மறுத்த அதிபர் கிம் ஜாங் இவை வட கொரியாவின் சர்வதேச பிம்பத்தைச் சிதைக்கத் தென் கொரியா பரப்பும் வதந்திகள் என்று மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

North Korea floods: 1,000 dead Death penalty for government officials


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->