ஆய்வகத்தில் இருந்து பரவியது தான் கொரோனா பெருந்தொற்று .. அமெரிக்க ஆய்வில் உறுதி.! - Seithipunal
Seithipunal


சீன ஆய்வகத்தில் இருந்து கொரோனா வந்திருக்கலாம் என்று முன்னாள் மாகாண ஆளுநரும் குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் உள்ள இந்தியா வம்சாலியை சார்ந்த நிக்கி ஹாலே பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் 'கொரோனா பெருந்தொற்று சீன ஆய்வகத்தில் இருந்து வந்திருக்கலாம் எனவும் அமெரிக்கா சீனாவுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும்' என அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இது குறித்து அவர் அளித்த பேட்டியில் 'எந்த ஒரு அமெரிக்கரும் தனது பணத்தை மோசமானவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் நான் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அமெரிக்காவுக்கு எதிராக செயல்படும் சீனா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பதை முழுமையாக தடுத்து நிறுத்துவேன். அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு தங்களுடைய வரிப்பணம் செல்கிறது என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது ட்ரம்பிற்கு போட்டியாக அதே கட்சி சேர்ந்த நிக்கி ஹாலே அறிவித்துள்ளது அமெரிக்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nikki Haley speech about covid and china


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->