அடுத்த அதிர்ச்சி..நடுவானில் திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் , லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது.இதில் பயணிகள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்.


சமீப காலமாக விமானங்களின் விபத்து பயணிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்ப்பட்டு வருகிறது. விமானங்களில் பயணம் செய்பவர்கள் ஒரு பதற்றத்துடன் செல்ல வேண்டிய நிலையில் ஏற்பட்டிருக்கிறது .ஏன் என்று சொன்னால்  அகமதாபாத்  ஏர் இந்தியா விமானம் விபத்தில் பயணிகள் ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து மற்ற அனைவரும் பலியான சம்பவம் இந்த நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

 இந்த சம்பவத்தால் விமான பயணிகள் ஒருவித பயத்துடன் தான் பயணம் செய்கின்றனர்.அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக  விமானங்கள் ஏறும் போதும் இறங்கும் போதும் விபத்துக்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது, இந்த நிலையில் அமெரிக்காவில் நடுவானில் சென்ற விமானம்  தீப்பிடித்து எறிந்தது.இதனால்  பயணிகள் அலறி துடித்தனர்.

அமெரிக்காவில் நேற்று, லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி டெல்டா ஏர் லைன்ஸ் உடைய போயிங் 767-400 ரக பயணிகள் விமானம் புறப்பட்டபோது  டேக்-ஆஃப் ஆனதும் அதன் இடது எஞ்சினில் தீப்பிடித்ததால், மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது. இந்த ஆண்டு டெல்டா விமானத்தில் எஞ்சின் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறை. கடந்த ஏப்ரல் மாதமும் ஆர்லாண்டோ விமான நிலையத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது. 

விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Next shock An airplane suddenly caught fire and burned in mid-air


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->