நியூயார்க் மோசடி வழக்கு: டிரம்ப் மீது விதிக்கப்பட்ட 500 மில்லியன் டாலர் அபராதத்தை ரத்து செய்த அமெரிக்க உச்சநீதிமன்றம்!
New York fraud case US Supreme Court overturns 500 million fine imposed on Trump
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிடியா ஜேம்ஸ் 2022-ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். டிரம்ப் தனது நிறுவனங்களின் சொத்துக்களின் மதிப்பை செயற்கையாக உயர்த்திக் காட்டி, வங்கிக் கடன்கள் மற்றும் காப்பீட்டு ஒப்பந்தங்களை பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2024-ல் டிரம்ப் மீது 500 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் அவரின் வணிகச் செயல்பாடுகள், குறிப்பாக நியூயார்க் மாநிலத்தில், பெரிதும் பாதிக்கப்பட்டன.
ஆனால் அதே ஆண்டின் இறுதியில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் தொடர்பான மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு அமர்வு தீர்ப்பளித்தது. அதில், முந்தைய தீர்ப்பில் விதிக்கப்பட்ட அபராதம் மிகைப்படுத்தப்பட்டதாகவும், அது அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை (Excessive fines clause) மீறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே, டிரம்ப் மீது விதிக்கப்பட்ட 500 மில்லியன் டாலர் அபராத உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இத்தீர்ப்பைத் தொடர்ந்து, தனது சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், “நியூயார்க் வணிகங்களை முற்றிலுமாக பாதித்த அநியாய உத்தரவை ரத்து செய்ய துணிச்சலாக செயல்பட்ட நீதிமன்றத்தை மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், டிரம்ப் வணிகச் செயல்பாடுகள் மீண்டும் சீராக நடைபெற வழி திறக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.
English Summary
New York fraud case US Supreme Court overturns 500 million fine imposed on Trump