சிரஞ்சீவியின் 'விஸ்வம்பரா' படத்தின் அடுத்தடுத்த updates ...! குஷியில் ரசிகர்கள்..!
Next updates Chiranjeevis Vishvambara Fans awe
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இதுவரை 156 படங்களில் நடித்து சிறந்து விளங்குபவர் 'சிரஞ்சீவி'. இவர் தற்போது ‘விஸ்வம்பரா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்க,18 வருட இடைவெளிக்கு பிறகு திரிஷா சிரஞ்சீவியுடன் இணைந்துள்ளார்.

மேலும், இப்படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 2 வேடங்களில் நடித்துள்ளார். கடந்த 2006-ல் ‘ஸ்டாலின்’ என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.மேலும், இப்படத்தில் 'மீனாட்சி சவுத்ரி' மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ளார்.
இப்படத்தில் இஷா சாவ்லா, சுரபி, ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் அதிகமான வி.எப்.எக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் சிரஞ்சீவியுடன் இணைந்து சிறப்பு பாடலில் பாலிவுட் நடிகை 'மவுனி ராய்' நடனமாடியுள்ளார். அடுத்த ஆண்டு கோடையின் போது வெளியாக இருக்கும்,இந்தப் படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானது.
மேலும்,டீசரில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்துமே வெவ்வேறு ஹாலிவுட் படங்களின் காட்சிகளின் தழுவலில் உருவாக்கி இருந்ததாக டீசர் விமர்சனத்திற்குள் மூழ்கியது.இந்நிலையில், விஸ்வம்பரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
English Summary
Next updates Chiranjeevis Vishvambara Fans awe