ஓட்டுநர் உரிமத்தில் மொபைல் எண் அப்டேட் செய்யனுமா? வீட்டில் இருந்தபடியே எல்லா வேலையும் முடிக்கலாம்! எப்படி தெரியுமா?
Want to update your mobile number on your driver license You can get all the work done from home Do you know how
தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பின்படி, அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களது வாகனப் பதிவுச் சான்றிதழில் (RC) மொபைல் எண்ணை புதுப்பித்திருப்பது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் எண் புதுப்பிக்கப்படாத நிலையில், வாகனத்தின் மாசுச் சான்றிதழ் (PUC) வழங்கப்படாது. மேலும் அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொபைல் எண் புதுப்பிப்பு ஆன்லைனிலும், மாவட்ட போக்குவரத்து அலுவலகத்திலும் செய்யும் வசதி உள்ளது.
புதுப்பிப்பு நடைமுறைகள் parivahan.gov.in, sarathi.parivahan.gov.in தளங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாகன எண், சேசிஸ் எண், எஞ்சின் எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை வழங்கி OTP மூலம் உறுதிப்படுத்தினால், மொபைல் எண் வெற்றிகரமாக இணைக்கப்படும்.
இதன் மூலம், போக்குவரத்துத் துறையின் அனைத்து அறிவிப்புகளும் நேரடியாக SMS மூலம் கிடைக்கும். மாசுச் சான்றிதழ், காப்பீடு காலாவதி தேதியை எளிதில் அறியலாம். போக்குவரத்து விதிமீறல் நடந்தால் மின்சலான் (e-Challan) தகவல் உடனடியாகத் தொலைபேசியில் வரும். மேலும் RC பதிவிறக்கம் உள்ளிட்ட பல சேவைகளை ஆன்லைனில் பயன்படுத்த முடியும்.
மொபைல் எண் புதுப்பிப்பு இல்லையெனில் போக்குவரத்து சேவைகளில் சிரமம் ஏற்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.
English Summary
Want to update your mobile number on your driver license You can get all the work done from home Do you know how