ஒரே நாளில் இவ்வளவு லட்டுகள் விற்பனையாகி சாதனையா...! - ஆச்சரியத்தில் தேவஸ்தான அதிகாரிகள்
Is record sell many laddus single day Devasthanam officials surprised
பிரபல திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்குவது வழக்கம்.அங்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டுவதும்,மேலும் பக்தர்கள் ஆசைபட்டு லட்டு வாங்கி செல்வதும் வழக்கத்தில் இருந்து வருகிறது.இந்த லட்டு தரத்துடன் சுவையாக இருப்பதால் பக்தர்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

இதனிடையே, கடந்த மாதம் 12-ந் தேதி தரிசனத்திற்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், ஒரே நாளில் 4,86,134 லட்டுகள் விற்பனையாகி தற்போது சாதனை படைத்துள்ளது. இதனால் தேவஸ்தானத்திற்கு ரூ 2.43 கோடி வருவாய் கிடைத்தது.
இதில் கடந்த ஆண்டு ஒரே நாளில் 3.24 லட்சம் லட்டுகள் விற்பனையானது. இதே போல் கடந்த ஆண்டு 1 கோடியே 4 லட்சத்து 57 ஆயிரத்து 350 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக 2 கோடியே 24 லட்சத்து 40 ஆயிரத்து 82 லட்டுகள் தயார் செய்யப்பட்டது.
இதனால் தேவஸ்தான அதிகாரிகள், தற்போது பக்தர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 4 லட்சம் லட்டுக்கள் இருப்பு வைத்துள்ளதாக தெரிவித்தனர்.இதில் நேற்று திருப்பதியில் 65,112 பேர் தரிசனம் செய்ததில், 27,331 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். மேலும், ரூ.3.49 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
English Summary
Is record sell many laddus single day Devasthanam officials surprised