இப்படி செய்து விட்டேனே...!அடுத்து என்ன செய்யலாம்? - விஜய் சேதுபதி
Ive done this What should I do next Vijay Sethupathi
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான 'விஜய் சேதுபதி',அண்மையில் 'பாண்டிராஜ்' இயக்கத்தில் நடித்த 'தலைவன் தலைவி' படம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் 'மிஷ்கின்' இயக்கத்தில் 'டிரெய்ன்' படத்திலும், அடுத்ததாக 'பூரி ஜெகன்நாத்' இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்திலும் 'விஜய் சேதுபதி' நடித்து வருகிறார்.

இதனிடையே, தன் மீதும், தனது மகன் 'சூர்யா' மீதும் மக்கள் முன் வைத்து வரும் விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி கவலை தெரிவித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது,"எல்லா இடத்திலும் எதிர்மறையான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அதை தடுக்க முடியாது. எப்படி கையாளுவது? என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம். நான் எந்த தவறு செய்தாலும், 'இப்படி செய்துவிட்டேனே...' என்று யோசிப்பதை விட, அடுத்து என்ன செய்யலாம்? என்பதையே யோசிக்கிறேன்.
இதில் ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறேன். அதற்கு செய்யவேண்டியதை செய்கிறேன். என் மீது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள், அடுத்த படத்தில் அவற்றைத் திருத்தி கொள்வேன்.
ரசிகர்களின் மனநிலை தான் எனக்கு முக்கியம்'' என்று தெரிவித்தார்.இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்க தக்க விதமாக மாறியுள்ளது.
English Summary
Ive done this What should I do next Vijay Sethupathi