விஜயின் பேச்சு எனக்கு திருப்தி அளிக்க வில்லை - தாடி பாலாஜி பரபரப்பு பேட்டி.!!
actor thadi balaji speech about tvk leader vijay
விஜய் தலைமையிலான தவெகவின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய தலைவர் விஜய், திமுக, பாஜகவை கடுமையாக சாடினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், விஜய்யுடன் இருப்பவர்களிடம் இருந்து முதலில் அவரை காப்பாற்ற வேண்டும் என்று தாடி பாலாஜி பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்ததாவது:- “விஜய் சார் முதல் மாநாட்டில் பேசியது பயங்கர பவராக இருந்தது. ஆனால் மதுரை மாநாட்டில் அவருடைய பேச்சு எனக்கு திருப்தி அளிக்க வில்லை.

விஜய் கூட இருப்பவர்களிடம் இருந்து அவரை முதலில் காப்பாற்ற வேண்டும். விஜய் கட்சி தொடங்கிய நிலையில், அவருக்கு நிறைய பிரச்சனை இருக்கிறது. விஜய்யை சந்தித்து பேச எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை பார்க்கும் போது நேரடியாக அவரிடம் பேசுவேன்.
மதுரை மாநாட்டில் கவின் ஆணவக் கொலை வழக்கு, அஜித் கொலை வழக்கு பற்றி விஜய் பேசியிருக்க வேண்டும்.. ராகுல் காந்தி கூறிய வாக்கு திருட்டு குறித்து ஏன் விஜய் பேசவில்லை..? தவெகவின் தேர்தல் வியூகம் என்ன? எப்படி பிரச்சாரம் செய்யப் போகிறோம்? தவெக கொள்கைகளை எப்படி சேர்க்கப் போகிறோம் என்பது பற்றி தலைவர் பேசியிருக்க வேண்டும்.
நேற்று மாநாட்டில் விஜய் ரேம்ப் வாக்கை முடித்த உடனே கூட்டம் கலைந்துவிட்டது. தலைவர் பேசுவதை கேட்க வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்களுக்கு இல்லை. விஜய்யை பார்த்தால் போதும் என்ற மனநிலையில் உள்ளனர். அவர்கள் இன்னும் ரசிகர் மனநிலையிலேயே உள்ளனர்.” என்று தெரிவித்தார்.
English Summary
actor thadi balaji speech about tvk leader vijay