விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்...! ஸ்பேஸ் எக்ஸ்-இன் அதிநவீன 'ஸ்டார்ஷிப்' ராக்கெட் சோதனை அபார வெற்றி...!
new milestone space history SpaceX state art Starship rocket test huge success
அமெரிக்க தொழில்நுட்ப உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் தலைமையிலான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அனுப்பும் மிகப்பெரிய விண்வெளி கனவை நோக்கி ‘ஸ்டார்ஷிப்’ எனும் அதிநவீன பிரமாண்ட ராக்கெட்டை உருவாக்கி வருகிறது.
சுமார் 40 அடுக்குமாடி கட்டிட உயரத்திற்கு இணையான இந்த விண்கலம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்ற 12-வது சோதனைப் பயணத்தில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.விண்வெளியை நோக்கி சீறிப்பாய்ந்த ராக்கெட், திட்டமிட்டபடி போலி செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்வெளிப் பாதையில் நிலைநிறுத்தியது.

பின்னர் திட்டத்தின் ஒரு பகுதியாக கடலில் விழுந்த அந்த ராக்கெட், தீப்பிழம்பாக வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த மாபெரும் விண்வெளித் திட்டத்திற்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக நடைபெற்ற பல சோதனை முயற்சிகள் நடுவானிலேயே வெடித்து தோல்வியில் முடிந்த நிலையில், இம்முறை ராக்கெட்டின் என்ஜின் மற்றும் கட்டமைப்பில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு வெற்றி பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, 2028-ம் ஆண்டு மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்பும் திட்டத்திற்காக இந்த ‘ஸ்டார்ஷிப்’ ராக்கெட்டையே பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 2030-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ள சூழலில், உலக விண்வெளி போட்டியில் முன்னிலை பிடிக்கும் நோக்கில் இந்த சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
English Summary
new milestone space history SpaceX state art Starship rocket test huge success