தொடர் நிலநடுக்கத்தால் திணறிய நேபாளம்! 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை! - Seithipunal
Seithipunal


நேபாளம், மேற்கு பகுதியில் அடுத்தடுத்த 2 முறை நிலநடுக்கம் உணரப்பட்டதை தொடர்ந்து ரிக்டர் அளவுகோலில் 5.3 மற்றும் 6.3 என பதிவாகியுள்ளது. 

இரண்டாவது முறையை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. 

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட அதன் காரணமாக 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு வீடுகள் இடிந்து செய்தமடைந்துள்ளன. இந்த நிலநடுக்கம் காரணமாக அருகில் உள்ள இந்தியாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இது குறித்து உத்தரகாண்ட் மாநிலம் ஹெச்.என்.பி. மத்திய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் தெரிவித்திருப்பதாவது, இப்போது தோன்றிய சிறிய நிலநடுக்கங்கள் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட இருப்பதை உணர்த்துகின்றது.

பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு பூமியில் உள்ள ஆற்றல் வெளியேற்றப்படும். இது தொடர்பாக நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நிலநடுக்கத்தை தாங்கும் அளவிற்கு கட்டிடங்களை கட்டமைக்க வேண்டும் என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nepal three back to back earthquakes


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->