நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஒத்திவைப்பு: நாசா அதிர்ச்சி தகவல்!
Nasa delays astronaut moon landing
அமெரிக்கா கடந்த 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ விண்கலத்தின் மூலம் மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது.
இதற்கிடையே அமெரிக்க விண்வெளி கழகமான நாசா 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுபவித்திட்டத்தை தொடங்கியுள்ளது.
முன்னதாக 2024 ஆம் ஆண்டுக்குள் மனிதனை நிலவுக்கு அனுப்புவோம் என நாசா தெரிவித்திருந்தது. இதன் முதல் கட்டமாக விண்கலத்தை ஏவி சோதனை செய்த நிலையில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2026 ஆம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் விண்வெளி வீரர்கள் நான்கு பேரை நிலவை சுற்றிவர அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டு இருந்தது.
ஆனால் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக விண்கலம் ஏவப்படுவது அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நிலவுக்கு மனிதர்களை 2026 ஆம் ஆண்டு அனுப்புவதாக நாசா தெரிவித்துள்ளது.
English Summary
Nasa delays astronaut moon landing