மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல்: கர்ப்பிணி உள்பட 21 பேர் பலி: அச்சத்தில் பொதுமக்கள்.. ! - Seithipunal
Seithipunal


கடந்த 2021-இல் மியான்மரில், ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசை கவிழ்த்து,  ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ரக்கைன் பிராந்தியம் மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 7.4 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதியாக சென்றுள்ளனர்.

இதையடுத்து, அங்கு ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய பழங்குடியின குழுக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன் காரணமாக அப்போது முதல் அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

இந்நிலையில், ரத்தின சுரங்கத் தொழிலின் மையமான மொகோக் நகரில் கிளர்ச்சியாளர்கள் தங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளதை அடுத்து, அப்பகுதியில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தினர். இதில், ,ஒரு கர்ப்பிணிப்பெண் உட்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை ஆயுதமேந்திய எதிர்க்கட்சி குழு, உள்ளூர்வாசிகள் உறுதி செய்துள்ளனர். குறித்த தாக்குதலில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட்டுள்ளனர். இதில், சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. அந்நாட்டு ராணுவம் நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டு பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Myanmar military airstrike kills 21 people including pregnant woman


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->