உலகெங்கும் வாழ தகுதியான 10 நகரங்களின் பட்டியல் வெளியீடு.. சாதனையில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா.! - Seithipunal
Seithipunal


உலகெங்கிலும் மிகவும் வாழக்கூடிய நகரங்கள் தொடர்பாக மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கைகள் தற்போது வெளியாகியுள்ளது. The Economist என்ற பத்திரிகையின் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வு நகரின் ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஒவ்வொரு நகரமும் கொரோனா தொற்றுநோயை எவ்வாறு கையாண்டது என்பதையும் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டு இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நியூசிலாந்து நாட்டின் அக்லாண்ட் (Auckland) உலகின் மிகவும் வசிக்கக்கூடிய நகரமாக 96.0 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது, சிரியாவின் டமாஸ்கஸ் (Damascus) கடைசி இடத்தில் இருக்கிறது. 

இரண்டாவது இடத்தில் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா (Osaka) நகரம் 94.20 புள்ளிகள் பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு (Adelaide) நகரம் 94.00 புள்ளிகள் பெற்றுள்ளது. நான்காவது இடத்தில் உள்ள நியூசிலாந்து நாட்டின் வெல்லிங்டன் (Wellington) நகரம் 93.70 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே நாளாவது புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது நகரமாக ஜப்பான் நாட்டின் டோக்கியோ (Tokyo) 93.70 புள்ளிகள் பெற்றுள்ளது. 

ஆறாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவில் பெர்த் (Perth) நகரம் 93.30 புள்ளிகள் பெற்றுள்ளது. ஏழாவது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஜுரிச் (Zurich) நகரம் 92.80 புள்ளிகள் பெற்றுள்ளது. எட்டாவது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனிவா (Geneva) நகரம் 92.50 புள்ளிகள் பெற்றுள்ளது. ஒன்பதாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (Melbourne) நகரம் 92.50 புள்ளிகள் பெற்றுள்ளது. இறுதியாக 10 வது இடத்திலும் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் (Brisbane) நகரம் 92.4 புள்ளிகள் பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் உள்ள 4 நகரங்கள் முதல் 10 இடங்களிலும், சுவிச்சர்லாந்து, நியூசிலாந்து, ஜப்பான் நாடுகளில் உள்ள தலா 2 நகரங்கள் முதல் 10 இடங்கள் கொண்ட பட்டியலில் இருக்கிறது. பிற நாடுகளின் புள்ளி பட்டியல்கள் ஜூன் மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என The Economist நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Most Livable Cities around the world Top 10 Cities The Economist Report 10 June 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->