அடுத்த பேராபத்து.. சீனாவில் புதிய வகை கொரோனா பாதிப்பு.. அச்சத்தில் உலக நாடுகள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா நோய்த்தொற்றுக்கு உலகம் முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நோய் தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

அதன் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் மூலம் கொரோனா தொற்றை உலக நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் சீனாவில் இன்னும் கொரோனா தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில் அதிக பாதிப்புடைய புதிய வகை கொரோனா அலை சீனாவை தாக்க வாய்ப்புள்ளதாக மூத்த சுகாதார ஆலோசகர் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் இந்த புதிய கொரோனா அலை ஜூன் மாத இறுதியில் உச்சத்தை எட்டக்கூடும் எனவும் இந்த வகை தொற்றால் வாரத்திற்கு சுமார் 6 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சீன மக்கள் மட்டுமில்லாமல் உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Most dangerous COVID wave spread in China July 2023


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->