லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு.! - Seithipunal
Seithipunal


லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மைத் தொற்று தற்போது உலக நாடுகளில் பரவி வருகிறது.

இந்நிலையில் கனடா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் நாடுகளில் குரங்கு அம்மைத் தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து மத்திய கிழக்கு நாடான லெபனானில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறிய பட்டதையடுத்து, அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monkeypox is the first case in Lebanon


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->