இத்தாலி.! மோசமான வானிலை காரணமாக காணாமல் போன ஹெலிகாப்டர் மற்றும் 7 பேரின் சடலங்கள் மீட்பு.! - Seithipunal
Seithipunal


இத்தாலியில் மோசமான வானிலை காரணமாக காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரின் சடலங்கள் மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வடக்கு இத்தாலியில் நான்கு துருக்கி தொழில் அதிபர்கள் உட்பட 7 பேருடன் வியாழன் அன்று லுக்கா நகரிலிருந்து டிரெவிசோ நகரை நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் மொடெனா பகுதிக்கு அருகே மோசமான வானிலை காரணமாக ரேடாரில் இருந்து விலகி சென்று காணாமல் போனது.

இதைத்தொடர்ந்து காணாமல் போன ஹெலிகாப்டரை தேடும் பணியில் இத்தாலி மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் டஸ்கனி மற்றும் எமிலியா ரோமக்னா பகுதிக்கு இடையே உள்ள எல்லை மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஹெலிகாப்டரில் இருந்து வர்த்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சென்ற துருக்கியை சேர்ந்த 4 பேர் மற்றும் லெபனான் நாட்டை சேர்ந்த இரண்டு பேர் உட்பட 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Missing helicopter founded in Italy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->