ரஷ்யா-உக்ரைன் போர் : ரஷ்யாவில் இனி இந்த ஏடிஎம் கார்டுகள் இயங்காது.! - Seithipunal
Seithipunal


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைகள் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.

அதனைத்தொடர்ந்து பிரபல மென்பொருள் உற்பத்தி நிறுவனங்களான இன்டல், எச்பி, ஆப்பிள், மைக்ரோசாப்ட், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்கள் விற்பனையை ரஷ்யாவில் நிறுத்துவதாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷியாவில் வரவிருக்கும் நாட்களில் விசா கார்டு பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என விசா நேற்று கூறியது.

விசா கார்டுகள் தடை செய்யப்பட்டவுடன் ரஷியாவில் வழங்கப்பட்ட கார்டுகள் வெளிநாட்டில் வேலை செய்யாது. வெளிநாட்டில் வழங்கப்பட்ட கார்டுகள் ரஷியாவிற்குள் வேலை செய்யாது என அறிவித்துள்ளது.

இதேபோல், உக்ரைன் மீதான ரஷிய போர் அதிர்ச்சியூட்டும் மற்றும் பேரழிவு தரக்கூடியது எனக்கூறிய மாஸ்டர்கார்டு, விசாவைப் போலவே மாஸ்டர்கார்டு தடையும் இருக்கும் என அறிவித்தது.

ரஷிய வங்கிகளால் வழங்கப்படும் கார்டுகள் இனி மாஸ்டர்கார்டு நெட்வொர்க்கால் ஆதரிக்கப்படாது. நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் எந்த மாஸ்டர்கார்டும் ரஷிய வணிகர்கள் அல்லது ஏ.டி.எம்.களில் வேலை செய்யாது என தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Master and visa cards service stopped in Russia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->