மனிதர்களை போல பற்கள் மற்றும் உதடுகளை கொண்ட ட்ரிகர் மீன்கள்.!!
Malaysia trigger fish identified
மலேசிய நாட்டில் வித்தியாசமான மீன் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மீன் "டிரிகர்" வகையை சார்ந்த மீன் என்று உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது.
இந்த மீன் மனிதனின் உதடுகள் மற்றும் பற்கள் அமைப்பை கொண்டுள்ளது. இந்த மீனின் வாயை பார்க்கும் சமயத்தில், அது மனித உறுப்பு போலவே இருக்கிறது. இந்த மீன் தொடர்பான புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

மேலும், இந்த மீனின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வரும் நபர்கள், தங்களின் உதடுகள் மற்றும் பற்களையும் சேர்த்து பகிர்ந்து வருகின்றனர். இந்த மீனை கண்டெடுத்த நபர்கள் கூட செய்யாத பல அலங்காரத்தை, சாப்டவெர் மூலமாக செய்து வருகின்றனர்.

இந்த மீனிற்கு மனிதர்களை போல உதட்டு சாயம் (லிப்ஸ்டிக்) போன்றவற்றை புகைப்படத்தில் எடிட்டிங் செய்து பகிர்ந்து வருகின்றனர். வளையம் போன்ற வடிவத்தை கொண்ட டிரிகர் மீன்களின் உதடு மற்றும் பற்கள் மனிதர்களை போல இருப்பது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Malaysia trigger fish identified