அடுத்தடுத்து இந்திய வம்சாவளி பெண்களை நியமித்து அதிரடி காட்டும் ஜோ பைடன்.!! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் அதிபராக ஜனவரி மாதம் ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். 

இந்நிலையில், ஜோ பைடன் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குனராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாலா அடிகா ஜில் பைடனின் மூத்த ஆலோசகராகவும், ஜோ பைடன்-கமலா ஹாரிஸ் பிரச்சாரத்தின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். 

இதற்கு முன்னதாக ஜோ பைடன் அறக்கட்டளையில் உயர்கல்வி மற்றும் ராணுவ குடும்பங்களுக்கான இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். முன்னாள் அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தின் போது கல்வி மற்றும் கலாச்சார விவகார பணியகத்தில் கல்வித் திட்டத்துக்கான துணை உதவி செயலாளராக மாலா அடிகா பணியாற்றி உள்ளார். 

உலக அளவில் மகளிர் பிரச்சினைகள் தொடர்பாக அம்மாநில அலுவலகத்தின் செயலாளராகவும், தூதரகத்தின் முக்கிய அதிக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். இல்லினாய்சை பூர்வீகமாகக் கொண்ட மாலா, கிரின்னல் கல்லூரி, மினசோட்டா  பொது சுகாதார பள்ளி மற்றும் சிகாகோபல்கலைக்கழக சட்ட பள்ளிகளில் பட்டம் பெற்றது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mala adiga appointed jilla bidens


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->