விமான நிலையத்திற்குள் கொட்டித் தீர்த்த மழை.. குளம் போல் மாறிய விமான நிலையம்.. வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


லண்டனில் உள்ள லூடான் விமான நிலையத்தில் பயணிகள் எதிர்பாராதவிதமாக மேற்கூரையில் இருந்து மழை நீர் கொட்டியது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். 

15 நிமிடத்திற்கு மேலாக மேற்கூரையில் மழை நீர் கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு தண்ணீர் தேங்கி சிறிய குளம் போல் மாறியது. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவத்திற்கு பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் உலகிலேயே மிக மோசமான விமான நிலையம் இது தான் என்று பதிவு செய்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து லூடான் விமான நிலையம் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. எதிர்பாராவிதமாக இப்படி ஆகிவிட்டது. இதனை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பதிவு செய்துள்ளனர்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

luton airport in rain


கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
கருத்துக் கணிப்பு

பட்டப்படிப்புகளுக்கு பொதுநுழைவுத் தேர்வு என்ற மத்திய அமைச்சரின் பேச்சு..!!
Seithipunal