'விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட்டம்'; சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் மூடல்..! - Seithipunal
Seithipunal


ஜனவரி 01 , 2026 ஆங்கில புத்தாண்டை வரவேற்க உலகத்தில் உள்ள அனைவரும் தயாராகியுள்ளனர். அதனபடி, நம் நாட்டிலும் முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டங்களுக்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தழிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பொதுமக்கள் புத்தாண்டை ஆவலாக எதிர் நோக்கியுள்ளனர்.

சென்னை மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் என அனைத்து முக்கிய நகரங்களிலும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்தில்லாத கொண்டாட்டமாக கொண்டாட தமிழக காவல்துறை பல்வேறு முக்கிய முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுவதாக பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டை விபத்தில்லாமல் கொண்டாட சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் இன்று (டிசம்பர் 31) இரவு 10 மணி முதல் நாளை (ஜனவரி 01) காலை 06 மணி வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளது

அத்துடன், புத்தாண்டு கொண்டத்திற்கு மது அருந்திவிட்டு அதிவேகத்தில் மக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் வாகனங்கள் ஓட்டுவோரை பிடிக்க மாநகரம் முழுவதும் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

All flyovers in Chennai closed for accident free New Year celebrations


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->