ரூ.380 கோடி வரை கல்லாகட்டிய காலண்டர் தயாரிப்பு; சட்டசபை தேர்தல் நெருங்குவதால் கூடுதல் ஆர்டர் செய்துள்ள அரசியல் கட்சியினர்..!
Political parties have placed orders for additional calendars ahead of the assembly elections resulting in business worth Rs 380 crores
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி சிவகாசியில், 370 கோடி ரூபாய்க்கு மேல் காலண்டர் வர்த்தகம் நடந்துள்ளது. இதனால் காலண்டர் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகாசி பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழிலுக்கு மட்டுமல்லாமல் காலண்டருக்கும் பிரசித்தி பெற்றது. இங்கு, 300க்கும் மேற்பட்ட காலண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இங்கு 15 முதல் 2,500 ரூபாய் வரை பல்வேறு விதங்களில் காலண்டர்கள் கிடைக்கின்றன.
இந்நிலையில் 2026 புது வருடத்திற்கான காலண்டர் உற்பத்தி பணிகள் இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில், 2026 ஜனவரி 20 ஆம் தேதி வரை புதிய ஆர்டர்கள் பெறப்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், அரசியல் கட்சியினர் கூடுதலாக ஆர்டர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், காலண்டர் தயாரிப்பு 05 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதன்படி, ஆண்டுக்கு 350 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்துள்ள நிலையில், இந்த ஆண்டு, 370 முதல் 380 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Political parties have placed orders for additional calendars ahead of the assembly elections resulting in business worth Rs 380 crores