401 ஆண்டுக் கால கடித விநியோக சேவை நிறுத்தம்; அகற்றப்பட்ட 1,500 சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள்..!
401 years old letter delivery service suspended
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், 1624 ஆம் ஆண்டு முதல் அஞ்சல் சேவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, உலகில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கடிதம் அனுப்புவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கடித்த சேவையை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கடித விநியோக சேவையை, உலகில் முதல் நாடாக டென்மார்க் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. டென்மார்க்கில் கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் கடிதம் அனுப்புவோரின் எண்ணிக்கை, 90 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதனால் 401 ஆண்டுகள் பழமையான இந்த கடித சேவையை நேற்றுடன் அந்நாட்டின் போஸ்ட்நோர்ட் அஞ்சல் நிறுவனம் முற்றிலும் நிறுத்தியுள்ளது.
இதனையடுத்து, டென்மார்க் முழுவதும் உள்ள 1,500 சிவப்பு நிற அஞ்சல் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இவற்றில் பல ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. அதில் வந்த நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடித விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், பார்சல் விநியோகத்தில் மட்டும் கவனம் செலுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
401 years old letter delivery service suspended