பொங்கல் பரிசாக ரொக்கம் இல்லை..? பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் தானாம்..!
There will be no cash as a Pongal gift in Tamil Nadu
வரும் ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை ரேசன் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்கப்படும். விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், பொங்கல் பரிசுடன் ரொக்கம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் 02 கோடியே 22 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு வழங்குவதற்காக ரூ. 248 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பில், பொங்கல் பரிசாக ரொக்க பணம் தருவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
There will be no cash as a Pongal gift in Tamil Nadu