கமலா ஹாரிஸ் மட்டுமல்ல, தானும் தமிழகத்தை சேர்ந்தவன் தான்.! ஜோ பிடன் அதிரடி.!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்து இருக்கும், சூழலில் ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ்தான் தற்போது இந்தியாவில் பேசுபொருளாகி இருக்கின்றார்.. அவருடைய பூர்வீகம் தமிழகத்தை சேர்ந்த மன்னார்குடி அருகே இருக்கும் துளசேந்திரபுரம் என்ற காரணத்தால் அவர் வெற்றி பெற வேண்டும் என்று துளசேந்திரபுரத்தில் சிறப்பு பூஜைகள் கூட நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஜோ பிடனுடைய முன்னோர்களும் இந்திய நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் எனும் செய்தி மேலும் மிகுந்த அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. 1972ல் செனட் உறுப்பினராக ஜோ பிடன் பதவியேற்ற நேரத்தில் இந்தியாவிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது.

பிடன் எனும் அவர்களுடைய குடும்ப பெயரிலேயே முடிந்த அந்த கடிதத்தில் இருவருடைய முன்னோர்களும் ஒருவரே என்றும், முந்தைய காலத்தில் பிடன் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கிழக்கிந்திய கம்பெனி மூலம் இந்தியா வந்தடைந்ததாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. 

சில வருடங்களுக்கு பின்னர், இது குறித்து ஒரு விழாவில் ஜோ பிடன், " என்னுடைய மூதாதையர்களில் ஒருவராக இருக்கும் ஜார்ஜ் பிடன் ஒரு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி உடைய கேப்டனாக செயல்பட்டு இந்தியா வந்தடைந்துள்ளார். அதன்பின், அங்கேயே வாழ்ந்ததாக கூறியுள்ளார்.

இருப்பினும், ஜார்ஜ் பிடன் எனும் பெயரில் கிழக்கிந்திய கம்பெனியில் யாரும் இருந்தார்களா என்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார். 

அதே நேரத்தில் பிடன் என்ற பெயரில் முடிகின்ற ஒருவர் முந்தைய மெட்ராஸுக்கு வந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. க்ரிஸ்டோபர் பிடன் என்கிற அவர் சென்னையில் வாழ்ந்து இறந்ததற்கான நினைவு சின்னமும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஜோ பிடனின் முன்னோர்கள் குறித்த இந்த தியரி தற்போது வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

joe biden speech about his Ancestors


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal