நாட்டையே உலுக்கிய நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


தீவு நாடான ஜப்பான், நிலநடுக்கம் மற்றும் சுனாமி உள்ளிட்ட பேரலைகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன்தினம் முதல் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டன. குறைந்தபட்சமாக 4.0 ரிக்டர் புள்ளிகளில் இருந்து அதிகபட்சமாக 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கங்கள் பதிவாகின. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதுடன், அவற்றில் விரிசல்களும் ஏற்பட்டன. 

மேலும், சாலைகள் மற்றும் வீதிகள் இரண்டாக பிளந்ததுடன், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் 33,500-க்கு மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த பேரிடரால் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், இந்தத் தொடர் நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரைக்கும் 57 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jappan earthquake death troll counts increase


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->