அதிகரிக்கும் சீனா - ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பு - ஜப்பான் குற்றச்சாட்டு - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் ஐரோப்பிய ஒன்றியத்தின் 2வது இந்தோ-பசிபிக் வெளியுறவு துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெற்றது. இந்நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஆசியாவில் ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரமப்பு மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போரில் சர்வதேச ஒழுங்கினை ரஷ்யா அழித்துவிட்டது. ஆனால் சீனா ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டு வருவதாகவும், உக்ரைன் போர் நிறுத்த நடவடிக்கையில் சீனா எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, மாறாக சீனா ரஷ்யாவிற்கு ஒத்துழைப்பை அதிகரித்து வருவதாக சீனாவை குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தைவான் எல்லையில் சீனாவின் போர் பயிற்சி மற்றும் ராணுவ நடவடிக்கைகளுக்காக ரஷ்யாவுடன் ராணுவ ஒத்துழைப்பில் இருப்பதாகவும், இந்தோ பசிபிக் பகுதியின் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில் சீனா செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Japan accuses increasing china Russia military cooperation


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->