அதிகரித்த கொரோனா தொற்று.. 20 மண்டலங்களில் போக்குவரத்திற்கு தடை.!! - Seithipunal
Seithipunal


இத்தாலியில் பிரதமராக கடந்த 13ம் தேதி இருந்து மரியோ திராகி பொறுப்பு வகித்து வருகிறார். இத்தாலியில் காரோண பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு நாட்டின் 20 மண்டலங்களுக்கு இடையிலான போக்குவரத்து வருகின்ற மார்ச் 27-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பதற்கான கட்டுப்பாடுகளையும் அந்நாட்டு அரசு நீட்டித்துள்ளது. இதன்படி ஒரு நபரின் வீட்டிற்கு 2 பேர் கூடுதலாக செல்ல முடியாது. அப்படி செல்வோர் ஒரு நாளுக்கு மேல் தங்க முடியாது. சிவப்பு மண்டலங்கள் இருப்பவர்கள் வேறு ஒருவரை சந்திக்க செல்வதற்கு அனுமதி இல்லை. 

பணி அல்லது அவசர காரணமாக பயணம் செய்வதற்கு அல்லது ஒருவர் தனது வீட்டுக்கு திரும்ப செல்ல வேண்டிய அவசியத்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு மண்டல போக்குவரத்து தடையானது பொருந்தாது என தெரிவித்துள்ளார். இத்தாலி நாட்டிற்கு சுற்றுலா செல்வதற்கான தடையும் தொடரும் என அறிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

italy 20 zone traffic ban


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->