பாதுகாப்பு கவச உடையுடன் லெபனான் எல்லைக்குள் நுழைந்த இஸ்ரேல் பிரதமர்; அமைதி பேச்சுவார்த்தை தொடங்கும் நிலையில் திடீர் ஆய்வு..! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கொட்டகை இணைந்து நடத்திய ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 02-ஆம் தேதியன்று லெபனான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு போரின் அடுத்த கட்டத்தை அறிவித்தது. இதற்குப் பதிலடியாக அதே மார்ச் மாதத்தில் இஸ்ரேல் ராணுவம் லெபனான் நாட்டுக்குள் தரைப்படை ஊடுருவல் நடத்தி தாக்குதலைத் தொடங்கியது.

இந்த பதற்றமான சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று லெபனான் எல்லைக்குள் நுழைந்தார். அவர் குண்டு துளைக்காத கவச உடை அணிந்தும், பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் ராணுவ தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஈயால் ஜமீர் ஆகியோருடன் சென்றிருந்தார்.

அங்கிருந்து ராணுவ முகாமில் இருந்து வீடியோ மூலம் உரையாற்றிய பெஞ்சமின் நெதன்யாகு, 'தீய சக்திகள் நம்மை அழிக்கத் திட்டமிட்டன. ஆனால், தற்போது அவர்கள் தங்களின் உயிர் பிழைப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். லெபனானில் இருந்து ஊடுருவும் அச்சுறுத்தலை முறியடித்துள்ளோம். போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை, இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் மீதம் உள்ளன' என்று அதிரடியாக கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதேநேரம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இஸ்லாமாபாத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியில் முடிந்துள்ளது. இதனையடுத்து லெபனான் எல்லையில் இஸ்ரேல் ராணுவம் 100 சதவீதம் தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்தி வருகிறது. லெபனான் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்க இன்னும் 48 மணி நேரமே உள்ளது.இந்நிலையில், நெதன்யாகுவின் இந்த லெபனான் பயணம் சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israeli Prime Minister Enters Lebanese Territory Clad in Protective Gear


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!


செய்திகள்



Seithipunal
--> -->